தேவை:
கோழி – 1 கிலோ
வற்றல் – 6 அல்லது 7 (விதை நீக்கியது)
பெல்லாரி – 1/2 கிலோ
தக்காளிப்பழம் – 3
டால்டா அல்லது நெய் – 3/4 கப்
பூண்டு – 1
வினிகர் – 1
உப்பு, மஞ்சள் தூள்
செய்முறை:
கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வற்றல், பூண்டை வினிகர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். கறியுடன் உப்பு, மஞ்சள் தூள் அரைத்த விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் கறியை இட்லித் தட்டில் ஆவியில் நன்றாக வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக வெட்டி நெய்யில் போட்டு பிரௌன் கலராக பொரித்து எடுத்து வைக்கவும். பின் கறியை நெய்யில் பிரௌன் கலர் ஆகும் வரை பொரிக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம் தகடாக வெட்டிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து பரிமாறவும்.