சிலோன் சிக்கன் பிரைய்

by Mrs Annam Senthil Kumar on December 4, 2009

தேவை:
தோல் உரித்த கோழி – 1 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டவும்)
வற்றல் – 8
மிளகு – 1 டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில் – 5 கரண்டி
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெங்காயம் – 1/4 கிலோ
இஞ்சி – 1 துண்டு
தக்காளி – 4
முட்டை – 4

செய்முறை:
மசாலாப் பொருட்களை அரைத்து கோழித்துண்டுகளில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், தக்காளி போட்டு வேக வைக்கவும். வெந்த பின் நீர் இல்லாமல் வற்ற வைக்கவும். பின் ஆற வைத்து கோழித்துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் போட்டு வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் வதக்கவும். முட்டைகளை உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து கோழி வறுவலுடன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.

Leave a Comment

Previous post:

Next post:

For Further Details:
Unavu Nalam, 31, Devanathan Street, Mandaveli, Chennai – 600 028, India. Reproducing Any Matter in Any Manner is Prohibited. All Rights Reserved.