காளான் ஆம்லெட்

by Mrs Annam Senthil Kumar on June 17, 2009

தேவையான பொருட்கள்:-
காளான் – 100 கிராம்
முட்டை – 5
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 3
மிளகுப்பொடி – 1 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் பொடி – தேவைக்கேற்ப

செய்முறை:-
முட்டைகளை நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
காளான், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி அடித்து வைத்துள்ள முட்டையுடன் சேர்க்க வேண்டும்.
மிளகுப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவிய பின் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து விட வேண்டும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123