ஃபிங்கர் ஃபிஷ்

by Mrs Annam Senthil Kumar on January 7, 2010

தேவை:
வஞ்சர மீன் – 1/2 கிலோ (முள், தோல் நீக்கி விரல் சைஸ்க்கு வெட்டி வாங்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
மீனை சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123