தேவை:
கொத்துக்கறி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பெருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி
சீரகம் – 3 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5
மிளகாய் வற்றல் – 15
தேங்காய் – 1 முடி
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 3
பூண்டு – 50 கிராம்
கசகசா – 2 தேக்கரண்டி
செய்முறை:
1/2 கிலோ கொத்துக்கறியை சுத்தம் செய்து தண்ணீர் வற்றும் படியாக வதக்கி, இறக்கிக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயம், 100 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் பூண்டு, 3 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 3 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் பொட்டுக்கடலை இவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக வதக்கவும். வதங்கிய பின் ஆற விடவும். ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். கசகசா 2 தேக்கரண்டி, 5 பச்சை மிளகாய், 15 மிளகாய் வற்றல், தேங்காய் 1 முடி துருவியது ஆகியவற்றைத் தனியாக வதக்கி, ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, முட்டை அடிக்கும் கருவினால் நன்கு அடித்துக் கொள்ளவும். மஞ்சள் கரு ஒன்றினை எடுத்து முட்டை தனியே வைத்துக் கொள்ளவும். வதக்கிய கொத்துக்கறியை உரலில் போட்டு தேவையான உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும். ஆட்டிய கறியுடன் அரைத்த மசாலாக்கள் சிறிது மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள மஞ்சள் கரு ஆகியவற்றைக் கலந்து, பிசைந்து உருண்டைகளாக தயாரித்துக் கொள்ளவும். வாணலியில் 300 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். .