கறி உப்புமா

by Mrs Annam Senthil Kumar on December 7, 2009

தேவை:
கொத்துக்கறி – 200g
பச்சை மிளகாய் – 6
பெரிய வெங்காயம் – 2
ரவை -250g
பட்டை – 2
நெய் – 1 கரண்டி
மஞ்சள் தூள், இஞ்சி, கொத்தமல்லி இலை
டால்டா – 3 தேக்கரண்டி
கிராம்பு – 4

செய்முறை:
கொத்துக்கறியில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கவும். பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 6, சிறிய துண்டு இஞ்சி, சிறிது கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ரவையைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். 3 தேக்கரண்டி டால்டாவைக் காய வைத்து 2 பட்டை, 4 கிராம்பு போட்டு சிவக்கவும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிய பின் கறிவேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றவும். திட்டமாய் உப்பு போட்டு வெந்தக்கறியையும் அதனுடன் சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பின் ரவையைப் போட்டு லேசான நெருப்பில் கட்டிவிடாமல் கிளறி விட்டு கொத்தமல்லி இலை, 1 கரண்டி நெய் விட்டு கிளறி இறக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123