தேவை:
ஆட்டு மண்ணீரல் – 1
சிறிய வெங்காயம் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
மிளகு, சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஆட்டு மண்ணீரல் சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாக கட் செய்யவும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். ப.மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சிறிது பட்டை, இலவங்க இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். இதை குக்கரில் போட்டு மண்ணீரல், மஞ்சள்தூள், ப.மிளகாய், தட்டிய இஞ்சி, பூண்டு முதலியவற்றை சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும். சூப்பிற்கு தண்ணீர் வேண்டிய அளவு சேர்க்கவும்.