மட்டன் கோலா குழம்பு

by Mrs Annam Senthil Kumar on December 4, 2009

தேவை:
மட்டன் – 1/2 கிலோ (கொத்தியது)
சின்ன வெங்காயம் – 25 கிராம்
பூண்டு – 25 கிராம்
தேங்காய் – 1/4 மூடி
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
உப்பு – தேவையானது
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:
மேற்கண்ட பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைஸாக அரைத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

மசாலா குழம்பு செய்ய தேவையானவை:
தேங்காய் – 1/4 முடி
சோம்பு – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மேற்கண்ட பொருட்களை நைஸாக அரைத்து வைக்கவும். இப்பொழுது வாணலியில் 25 கிராம் எண்ணெய் ஊற்றி, தலா 1 டீஸ்பூனு பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு வதக்கி 100 கிராம் பெ. வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கவும். பொன் நிறத்தில் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும் பின் 50 கிராம் தக்காளியைச் சேர்த்து கிளறவும். சுண்டைக்காய் சைஸ் புளியை கரைத்து ஊற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். குழம்பு 10 நிமிடம் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123