மட்டன் தன்சக்

by Mrs Annam Senthil Kumar on December 4, 2009

தேவை:
கறி – 1/2 கிலோ
து. பருப்பு – 1/2 கப்
கலந்த பருப்பு – 1/2 கப் (கடலை, பயத்தம் பருப்பு)
உருளைக்கிழங்கு – 1
கத்தரிக்காய் – 1
பெ.வெங்காயம் – 2
வெந்தயக்கீரை – 1 கட்டு
பரங்கிக்காய் துண்டு – 1
பூசணிக்காய் – 1
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையானது
உப்பு – தேவையான அளவு
மசாலா குழம்பு செய்ய தேவையானவை:
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
சீரகம், தனியா பொடி – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 சிறியதுண்டு
பூண்டு – 10 பல்
இலவங்கப் பட்டை – 1 சிறிய துண்டு
கொத்த மல்லி தழை – 1 சிறிய கட்டு

செய்முறை:
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாகச் செய்து கொள்ளவும். காய்களைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, வெந்தயக்கீரை இவற்றை நறுக்கிக் கொள்ளவும். பருப்புகளைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இவற்றை குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளித்தண்ணீர் பயன்படுத்தி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். இவற்றுடன் வேக வைத்த கறி, பருப்பு, காய் கலவையை சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பின்பு இந்த கலவையை நன்றாக மசிக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123