தேவை:
கொத்திய கறி – 1/2 கிலோ
பெ. வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 150 கிராம்
பச்சரிசி மாவு – 200 கிராம்
முட்டை – 1
மிளகுதூளு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
மஞ்சள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
செய்முறை:
கறியை லேசாக உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் கறி, சோயா, தக்காளி சாஸ் சேர்த்து சுண்ட வதக்கிக் கொள்ளவும். அடுத்து இரண்டு மாவுடன் முட்டை, மிளகுதூள், அஜினோமோட்டோ சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறுசிறு தோசைகளாக ஊற்றிக் கொள்ளவும். 10 அல்லது 15 தோசைகள் செய்யவும். ஒவ்வொரு தோசைகளின் மேலும் வதக்க வைத்துள்ள கறிக்கலவையை கொஞ்சம், கொஞ்சமாக வைத்து ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் லேசாக மாவு வைத்து மூடவும். இந்த ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.