மிளகு மட்டன் மசாலா

by Mrs Annam Senthil Kumar on December 9, 2009

தேவை:
மட்டன் – 1/2 கிலோ (எலும்பு நீக்கியது)
பெ.வெங்காயம் – 4
மிளகு, சீரகத்தூளு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையானது
எண்ணெய் – தேவையான அளவு
தக்காளி – 3
கறிமசால் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:
மட்டனை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்க இலை தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மிளகு, சீரக மஞ்சள் தூள், தக்காளி, ப.மிளகாய், கறிமசால் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் லேசாக ஊற்றவும். பின்பு வேக வைத்த கறியை இக்கலவையில் சேர்த்து சுண்ட வதக்கி இறக்கி விடவும். அதன் மீது நறுக்கிய வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123