தேவை:
மைதா – 500 g.
சீனி – 150 g
பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
டால்டா அல்லது நெய் – 100 g
எஸன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை:
மைதாவையும், பேக்கிங் பவுடரையும் நன்கு சலிக்கவும். அதனுடன் சீனியைப் பொடித்து மாவாக்கிக் கலக்கவும். டால்டா அல்லது நெய் இளக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து பூரிமாவு பக்குவம் வந்தவுடன் அப்படியே வைக்கவும். பின் பூரிப்பலகையில், பூரிக்கட்டை கொண்டு அரை சென்டி மீட்டர் திண்ணத்தில், பூரிக்கட்டைக் கடினமாக அழுத்தாமல் உருட்டவும். பிஸ்கட் வடிவ அச்சு அல்லது ஹார்லிக்ஸ் பாட்டி மூடியை வைத்து வட்ட வட்ட அச்சாக வெட்டி கேக் அடுப்பு தட்டில் அடுக்கவும். இளம் சூட்டில் வேக வைக்கவும். கடையில் வாங்கும் பட்டர் பிஸ்கட் மாதிரியே இருக்கும். எசன்ஸ்க்குப் பதில் சுக்குத்தூள் அல்லது ஏலக்காய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்ந்தாலும் பிஸ்கட் ருசியும், மணமும் சேர்ந்து இருக்கும். நெய் அல்லது டால்டா மட்டுமே சேர்க்கவும். (வெண்ணெய் சேர்த்தால் பிஸ்கட் கடினமாகிவிடும்).