மெக்ரூன்ஸ்

by Mrs Annam Senthil Kumar on January 8, 2010

தேவை:
முட்டை (வெள்ளைக்கரு) – 4
முந்திரிப்பருப்பு துருவியது – 250 g
சீனி – 250 g

செய்முறை:
முட்டை வெள்ளைக் கருவை சிறிது கூட மஞ்சள் கலக்காமல் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முள் கரண்டி வைத்து வெள்ளைக்கருவை நன்கு நுரை பொங்க பாத்திரத்தைக் கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும். சீனியையும் சிறிது சிறிதாகச் கலக்கி அடித்தால் வெள்ளைப்பனிமலை போல் பொங்கி வரும். 30 – 35 நிமிடம் ஆகும். நறுக்கிய முந்திரிப்பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக் கருவுடன் (யீஷீறீபீ ஷீஸீ) நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு மேஜைக்கரண்டி கலவையைக் கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100 – 150 டிகிரி சூட்டில் வேக வைக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123