சிங்கி ரால்

by Mrs Annam Senthil Kumar on December 4, 2009

தேவை:
சிங்கி ரால் – 1/4 கிலோ
வற்றல் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் – தாளிக்க எண்ணெய்
சீரகம் – 1 தேக்கரண்டி
முருங்கை இலை – சிறிது

செய்முறை:
சிங்கிராலை சுடு நீரில் போட்டு வைத்து மேல் தோட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுக்கவும். புட்டு மாதிரி உதிர்த்து வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தன் தண்ணீரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும். சிங்கிராலையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123