கொண்டைக் கடலை குழம்பு

by Dr Senthil kUmar on August 13, 2010

தேவையான பொருட்கள்:-
கொண்டைக்கடலை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
பூண்டு – 2 அல்லது 3 பல்
சோம்பு, மிளகு – சிறிது
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:-
கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து சோம்பு, மிளகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையில் போட வேண்டும். நன்கு கொதித்தவுடன் பொடி செய்த துவரம் பருப்பு சீரகப் பொடியைப் போட்டு இறக்க வேண்டும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123