தேவையான பொருட்கள்:-
பறங்கிக்காய் – 1/2 கிலோ
தேங்காய் – 1/2 மூடி
கடலைப் பருப்பு – 100 கிராம்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
பறங்கிக் காயைத் தோல் சீவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அத்துடன் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடலைப் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போதிய அளவு நீர் விட்டு, பறங்கிக்ககாயை வேக வைக்கவும்.
அதில் கடலைப் பருப்பைச் சேர்க்கவும்.
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.
தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
நன்கு வெந்ததும், எண்ணெயை ஊற்றி இறக்கி வைக்கவும்.