கத்தரிக்காய்க் கூட்டு

by Mrs Annam Senthil Kumar on September 4, 2009

தேவையான பொருட்கள்:-
கத்தரிக்காய் – 1/2 கிலோ
துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
சாம்பார்ப் பொடி – 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கொஞ்சம்
கறிவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை:-
கத்தரிக்காய்களைச் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
துவரம் பருப்பை, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்துப் பாதி வேக்கடாக வேக வைக்கவும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டிக கொள்ளவும்.
துவரம் பருப்போடு, கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வேக வைக்கவும்.
சாம்பார்ப் பொடியைக் கலந்து கொள்ளவும்.
கத்தரிக்காய் வெந்ததும் உப்பைப் போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, கத்தரிக்காயோடு கலந்து இறக்கி வைக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123