கத்தரிக்காய்ப் பொரியல்

by Mrs Annam Senthil Kumar on September 4, 2009

தேவையான பொருட்கள்:-
கத்தரிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம் – 4
பச்சரிசி – 3 ஸ்பூன்
தேங்காய்ப் பூ – 3 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
கடுகு – 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
எண்ணெய் – 10 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
கத்தரிக்காயை அரிந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அரிசி, கடலைப் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வாணலியில் வறுத்து, அதைத் தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்து, அதில் முதலில் வெங்காயத்தையும் பிறகு கத்திரிக்காயையும் போட்டு வதக்கவும்.
மிளகாய்த் தூள், உப்பு போடவும்.
தண்ணீர் தெளிக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும்.
காய் நன்றாக வெந்ததும், தேங்காய்ப் பூவைப் போடவும்.
தூள் செய்துள்ள அரிசி, பருப்புப் பொடியைத் தூவி, இறக்கி வைக்கவும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123