தேவையான பொருட்கள்:-
முளைக்கீரை – 2 கட்டு
பாசிப் பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 2
சீரகம் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 2 பல்
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
செய்முறை:-
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அரிந்து கொள்ளவும்.
வாணலியில் போதிய அளவு தண்ணீர் விட்டு, பாசிப்பருப்பு, முளைக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயத்துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.
கீரை வெந்தவுடன், சீரகத்தையும், உப்பையும் போட்டு மத்தினால் கடைந்து கொள்ளவும்.
பூண்டுப் பற்களை நசுக்கிப் போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, போட்டுத் தாளித்துக் கொண்டு, கீரை மசியலை அதில் சேர்க்கவும்.