தேவையான பொருட்கள்:-
சேனைக் கிழங்கு – 1/4 கிலோ
மோர் – 1/2 டம்ளர்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
சேனைக்கிழங்கின் தோலைச் சீவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மோரில் தண்ணீர் கலந்து, அந்த நீர் மோரில் சேனைக் கிழங்குத் துண்டுகளைப் போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சேனைக் கிழங்கைப் போட்டு வறுத்து, மிளகாய்த் தூள், உப்புப் போட்டுக் கிளறவும்.
சிவந்து மொறுமொறு வென்றானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.
சேனைக்கிழங்கு வறுவல்
Previous post: உருளைக் கிழங்கு பால் கூட்டு
Next post: எருசேரிக் கூட்டு