தேவையான பொருட்கள்:-
சேனைக் கிழங்கு – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 10
எலுமிச்சம் பழம் – 2
வெங்காயம் – 3
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கொஞ்சம்
இஞ்சி – 2 துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
சேனைக் கிழங்கின் தோலைச் சீவிக் கொண்டு, சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, அதைப் பிசைந்து கொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொள்ளவும்.
சேனைக் கிழங்கு மசியலில் எலுமிச்சம் பழச் சாறைக் கலந்து, மிளகாய்த் தூள் போட்டு, உப்புப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளவும்.
அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மசித்து வைத்துள்ள சேனைக் கிழங்கைச் சேர்த்து, மிதமான தீயில், அடி பிடித்து விடாமல், கிளறவும்.
மசியல் பவுன் நிறமாக வந்ததும், இறக்கி வைக்கவும்.