தேவையான பொருட்கள்:-
சேப்பங் கிழங்கு – 1/2 கிலோ
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தூவி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
சேனைக் கிழங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அந்த எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொள்ளவும்.