பலாக்காய்க் கூட்டு

by Mrs Annam Senthil Kumar on September 4, 2009

தேவையான பொருட்கள்:-
பலாக்காய் – 1
சிறிய வெங்காயம் – 1
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
துவரம் பருப்பு – 100 கிராம்
சாம்பார்ப் பொடி – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
பலாக்காயின் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
துவரம் பருப்பில் மஞ்சள் தூளைக் கலந்து, தண்ணீர் ஊற்றி, அதை அரை வேக்கடாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கிப் பருப்பில் போட்டு, பலாக்காய்த் துண்டுகளையும் போடுங்கள்.
சாம்பார்ப் பொடியைக் கலக்கவும்.
பலாக்காய் முற்றிலும் வெந்தவுடன், உப்பைத் தூவுங்கள்.
எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்து, பலாக்காய்க் கூட்டுடன் சேர்க்கவும்.
தேங்காய்த் துருவலையும் போட்டு, பலாக்காய்க் கூட்டைச் சுவை மிக்கதாக்கிக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Previous post:

Next post:

For Further Details:
Unavu Nalam, 31, Devanathan Street, Mandaveli, Chennai – 600 028, India. Reproducing Any Matter in Any Manner is Prohibited. All Rights Reserved.