தேவையான பொருட்கள்:-
சிறிய பலாக்காய் – 1
தேங்காய் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 2
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
பலாக்காயின் தோலைச் சீவி விட்டு, பொடிப் பொடித் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை அரிந்து கொள்ளுங்கள்.
பலாக் காயில் போதிய அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான உப்புப் போட்டு வேக வைக்கவும்.
வெந்ததும், அதிலுள்ள தண்ணீரை இறுத்து விடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை அதனுடன் சேருங்கள்.
அதில் வேக வைத்த பலாக்காய்த் துண்டுகளையும் போட்டு, தேங்காய்த் துருவலையும் போட்டு, கிளறி விட்டு, இறக்கிக் கொள்ளுங்கள்.