தேவையான பொருட்கள்:-
சிறிய பலாக்காய் – 1
தேங்காய் – 1
முந்திரிப் பருப்பு – 10
பொட்டுக் கடலை – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
தக்காளி – 2
கடுகு, உளுந்தம் பருப்பு,
ஏலக்காய், கிராம்பு – 1 ஸ்பூன்
பட்டை – கொஞ்சம்
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கொஞ்சம்
செய்முறை:-
தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள்.
பலாக்காயின் தோலைச் சீவி, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அதில் மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து, அரை வேக்கடாக வேக வைத்துக் கொண்டு, தண்ணீரை இறுத்து விடுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் 5 முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, கசகசா ஆகிய பொருள்களைப் போட்டு வதக்குங்கள்.
அத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, மழுமழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
தக்காளியையும், வெங்காயத்தையும் துண்டகளாக்கிக் கொள்ளுங்கள். பூண்டை உரித்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, மீதமுள்ள 5 முந்திரிப் பருப்பு போட்டுத் தாளித்துக் கொண்டு, தக்காளி, வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்குங்கள்.
அந்த வதக்கலில் வேக வைத்திருக்கும் பலாக்காய், அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி விடுங்கள்.
அளவாக அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்புப் போட்டுக் கொதிக்க வைக்கவும்.
குருமா திக்கானதும் இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.