பலாக்காய் மசாலா

by Mrs Annam Senthil Kumar on September 4, 2009

தேவையான பொருட்கள்:-
சிறிய பலாக்காய் – 1
சிறிய வெங்காயம் – 1
தக்காளி – 2
தேங்காய்த் துருவல் – 5 ஸ்பூன்
வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு, உளுந்தம் பருப்பு,
சோம்பு, சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கொஞ்சம்
மிளகாய் வற்றல் – 6

செய்முறை:-
பலாக்காயின் தோலைச் சீவிப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்கடாக அவித்து, தண்ணீரை இறுத்து விடுங்கள்.
தக்காளியையும், வெங்காயத்தையும் நறுக்கிக் கொண்டு, பூண்டை உரித்துக் கொள்ளுங்கள்.
தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை ஒன்றாக மழுமழுப்பாக அரைத்து மசாலாவாக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், தாளிப்புப் பொருள்களை (கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், சோம்பு) அதில் போட்டுத் தாளித்துக் கொண்டு, தக்காளி, வெங்காயத் துண்டுகளையும், பூண்டையும் போட்டு வதக்குங்கள்.
அரைத்து வைத்திருக்கும் மசாலாப் பொருள்களை அந்த வதக்கலுடன் சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் வதக்குங்கள்.
அதில் அரை வேக்கடாகாவுள்ள பலாக்காய்த் துண்டுகளைப் போட்டு, அளவான தண்ணீர் விட்டு, உப்புப் போட்டுக் கிளறி விடுங்கள்.
தண்ணீர் வற்றியதும் இறக்கிக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Previous post:

Next post:

For Further Details:
Unavu Nalam, 31, Devanathan Street, Mandaveli, Chennai – 600 028, India. Reproducing Any Matter in Any Manner is Prohibited. All Rights Reserved.