தேவையான பொருட்கள்:-
அவரைக் காய் – 10
மாங்காய் – 1
கத்தரிக்காய் – 5
முருங்கைக் காய் – 2
வாழைக்காய் – 1
கேரட் – 2
உருளைக் கிழங்கு – 2
பூசணிக்காய் கீற்று – 1
தேங்காய் – 1
பச்சை மிளகாய் – 15
தயிர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
எல்லாக் காய்களையும் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அளவாகத் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்களைப் போட்டு, உப்புப் போட்டு, வேக வைக்கவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து மூடி வைக்கவும்.